சி.கார்த்திகேசு (புனைபெயர்: சேந்தன்). யாழ்ப்பாணம்: க.ஆறுமுகம், முருகன் அருட்பிரவாகம், 171ஃ10, நல்லூர் வடக்கு வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 1994. (கொழும்பு 11: ல க்ஷ்மீஹர, 309, செட்டியார் தெரு). vii, 32 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 20.5×14.5 சமீ. விநாயகர், சிவன், சரஸ்வதி பேரிற் கடவுள் வணக்கத்தைச் செலுத்தித் தொடரும் 40 கீர்த்தனைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. நல்லைக் கோபுரம், நேரந் தவறாத பூசை, நல்லை மணியோசை, கந்தன் கருணை வேண்டும், உண்மையான தெய்வம், முருகனைத் தொழு மனமே, காண்பன எல்லாம், கைவிட மாட்டான், நெஞ்சே நீ பாடு, கூவு குயிலே, சொல்லு பல்லி, தூது சொல்வாய் குயிலே, என்ன குறையுண்டு, அச்சம் உனக்கொன்றுமே இல்லை, தமிழ்த் தெய்வம், அள்ளி உண்டிடலாம், நல்லைக் கந்தனை நாடிடத் தீரும், என்ன குறைதான் உண்டு, பிணி தீர வாரீர், நாடு அமைதிபெற, அன்புத் தெய்வம், சிந்தனை செய் மனமே, தாங்காது துன்பமையா, பாடிடும் ஆசையை மறவேன், திருவருளே சரண், கைவிடமாட்டான், பாடினேன் நானுன்னைப் பலபாட்டு, என்ன குறைதான் உனக்குண்டு, காணக் கண் கோடி வேண்டும், தங்கரதத்தில் வந்தான், தங்க மயில்மீது வந்தானடி, கார்த்திகைத் திருவிழா, திரு அருள் தா தா, சித்தம் இரங்காதா?, என்னால் மறப்பதும் உண்டோ?, ஆண்டு கொள்வாய், வீதியுள்ளே வந்து பாரும், ஆரிடஞ் சொல்லி ஆறுவேன், இன்னமுஞ் சின்னப் பிள்ளை தானோ நீ, நல்ல புகலிடம் ஆகிய தலைப்புகளில் இக் கீர்த்தனைப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31792).