ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிசிசாகா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (Canada: Silver Print House, 5030, Heatherleigh Ave Unit No. 60, Mississauga, Ontario, L5V 2G7) 24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14.5 சமீ. யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள், கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச காண்டம், முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகர் மகிமைகளையும் அருட்செயல்களையும் திரட்டிப் பிள்ளையார் கதை என்னும் காவிய நூலாக்கியுள்ளார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள், அதனை அடியார்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான வாக்கிய நடையில் அமைத்து இலவச வெளியீடாக வழங்கியுள்ளார்.