சி.குஞ்சிதபாதக் குருக்கள். கொழும்பு: சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள், பிரதம சிவாசாரியார், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்துடன் இணைந்திருந்த குருமணிகளுள் சிவஸ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ மங்களேஸ்வரக் குருக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிவஸ்ரீ கணபதீஸ்வரக் குருக்களுக்குப் பின்னர் ஈழத்துச் சிதம்பரேஸ்வரப் பெருமானுக்கு தம்மை அர்ப்பணித்துச் சிவப்பணி புரிந்தவர் சிவஸ்ரீ மங்களேஸ்வரக் குருக்களாவார். அவர் 2001ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசிப் புண்ணிய தினத்தில் சிவகதி எய்தியவர். அவரது தமக்கையின் மகளை திருமணம் செய்தவர் இந்நூலாசிரியர். சிவஸ்ரீ மங்களேஸ்வரக் குருக்களின் வாழ்க்கையுடன் நித்திய வாழ்க்கைக்கே உரித்தான மிகவும் அவசியமான நித்திய கருமவிதி, சிவபுராணம், ஸ்ரீ சிவ சஹஸ்ர நாமாவளி (கிரந்தாக்ஷ்ரம்), ஸ்ரீ சிவ சஹஸ்ர நாமாவளி (தமிழ்), ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி (கிரந்தாக்ஷ்ரம்), ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி (தமிழ்) ஆகிய வற்றை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39110).
Best Casino Apps for 2024 Real cash & Free Enjoy
Blogs Come across a premier Asia Local casino to play A real income Ports inside August 2024 – Narcos slot machine Unibet Gambling enterprise Free