14237 வாழைச்சேனைப்பிரதேசத்து திருத்தல பஜனைப் பாடல்கள்.

பெ.புண்ணியமூர்த்தி. வாழைச்சேனை: சிவநெறிப் புரவலர் வெளியீடு, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126ஃ1, திருமலை வீதி). எii, 25 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 22×16 சமீ. ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரும் பிரபல சோதிடரும் சிவநெறிப்புலவர் எனும் பட்டத்தினைப் பெற்றவரும் சிறந்த சமயச் சொற்பொழிவாளருமான பெ. புண்ணியமூர்த்தி அவர்கள் வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமர்ந்துள்ள பல்வேறு திருத்தலங்களின்மீதும் பாடியருளிய திருத்தல பஜனைப்பாடல்கள் இவை. வாழைச்சேனை விநாயகா, பிள்ளையாரப்பா, அரோகரா, விநாயகனே சரணம், என்று நீயும் அருள்வாய், வீரையடி நாதனே, பிள்ளையாரு பிள்ளையாரு, காகிதநகரின் கணநாதா, கல்குடாவின் நாயகா, சித்தி விநாயகனே, வட்டவானின் பிள்ளையார், அன்பருள்ளத் தமர்ந்தவனே, பட்டியடிச்சேனை கண்ணனே, காளியைப் போற்றுவோம், புதுக்குடியிருப்பு உறைபவள், சுகங்கள் தரும் சுந்தரி, ஆதி நீ-ஆதிசிவனின் பாதி நீ, வாருங்கள் வாணியைப் பாடுங்கள், மாரியம்மா மாரியம்மா, சரவண பவனே, முனையிலுறை முருகனே, சிவகுருநாதா, முருகா சரணம், மாவடியின் மாரியம்மா, ஆலங்குளத்தமர்ந்தவனே ஆகிய 25 தலைப்புகளில் இப்பாமாலை கோர்க்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்