14239 ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் இரண்டாவது அசுரகாண்டம் மூலமும் உரையும்.

கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்). பருத்தித்துறை: ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள், தருமாலய வெளியீடு, 2வது பதிப்பு, 1928, 1வது பதிப்பு, 1909. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை). 656 பக்கம், விலை: 4ரூபா 8 அணா, அளவு: 20.5×14 சமீ. கந்தபுராணக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ஆறு காண்டங்களில் இரண்டாவது காண்டமாகத் திகழ்வது அசுர காண்டமாகும். இக்காண்டம் மாயைபபடலத்திலிருந்து அமரர் சிறைபுகு படலம் ஈறாக 43 படலங்களைக் கொண்டமைந்துள்ளது. இப்புராணத்தில் அதிக படலங்களையும் பாடல்களையும் கொண்ட காண்டமும் இதுவாகும். அசுரர், அவர்தம் இயல்பு, சூரபன்மன் முதலானோரின் செயல்கள், அரசு, அரசாட்சி, இந்திரன் முதலான தேவர்களின் துயர் என்பவற்றை இக்காண்டம் விபரித்து நிற்கின்றது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பைநகர் ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதிய இந்நூல் 1909இல் முதற்பதிப்பினைக் கண்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 004835).

ஏனைய பதிவுகள்