ந.மா.கேதாரம்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: ந.மா.கேதாரம்பிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (8) பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டுவரிகள் கொண்ட 16 செய்யுள்களில் ஸ்ரீ நாராயண தோத்திரப்பாவும், எட்டு வரிகள் கொண்டனவாக அமைந்த பன்னிரண்டு செய்யுள்களில் கெருட பத்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சித்தாயுர்வேத வைத்தியராகப் பணியாற்றும் ந.மா.கேதாரப்பிள்ளை அவர்கள், வழக்கிழந்துபோகும் பழம் நூல்களை மீளப் பதிப்பித்து விற்பனைசெய்யும் பணியில் மட்டக்களப்பிலிருந்து பலகாலம் ஈடுபட்டு வந்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).
14266 அரசறிவியல் அறிமுகம். எஸ்.கீதபொன்கலன்.
கொழும்பு: சந்தியாபிள்ளை கீதபொன்கலன், விரிவுரையாளர், வரலாற்று அரசறிவியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 12: சீ.வீ.ஆர். பிரின்டர்ஸ், குணசிங்கபுர).vii, 164 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.