க.சு.நவநீத கிருஷ்ண பாரதியார் (உரையாசிரியர்), இராஜ.சிவ. சாம்பசிவசர்மா (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: பத்மா பதிப்பகம், மாவிட்டபுரம், பெப்ரவரி 1954. (சென்னை 5: கபீர் அச்சக்கூடம்). (32), 1192 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 21.5×13.5 சமீ. மதிப்புரை, உரையாசிரியர் முன்னுரை, உரையாசிரியர் அறிமுகம், ஸ்ரீ மாணிக்கவாசகர் வரலாறு பற்றிய குறிப்பு, உரையுள் எடுத்தாண்ட நூல்கள், இந்நூலில் வந்துள்ள உவமைகள், திருவாசகப் பதிக வரிசை, திருவாசகப் பதிகத் தொகை, பதிகவகராதி, உரிமையுரை, திருவாசக ஆக்கம், கடவுள் வணக்கம், அவையடக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து நூலும் உரையும் இடம்பெற்றுள்ளன. இறுதியில் செய்யுள் முதற் குறிப்பகராதி காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002444).