ஹஸனுல் பன்னா(ரஹ்), மௌலானா மௌதூதி. கொழும்பு 9: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி வெளியீடு, 204/1, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1973. (கொழும்பு 10: டயமண்ட் அச்சகம், 98, டீன்ஸ் ரோட், மருதானை). 64 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×13 சமீ. இஸ்லாமியர்கள் ஏன் தொழுகை செய்யவேண்டும் என்பதை விளக்கும் சிறு நூல். தொழுகை ஒரு விளக்கம், ஜமாஅத் தொழுகை, தொழுகை பயன்தர வேண்டுமானால், தொழுகையின் மொழி ஆகிய நான்கு கட்டுரைகளின் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது இடம்பெற்றுள்ள கட்டுரை மத்திய கிழக்கின் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்க ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களுடையது. ஏனைய கட்டுரைகளின் ஆசிரியர் இஸ்லாமிய அறிஞர் மௌலானா ஸெய்யித் அபுல் அஃலா மௌதூதி என்பவராவார்.
14018 ஐம்பது ஆண்டு பாராளுமன்ற அனுபவம்(50 Years as Lobby Correspodent).
எஸ்.தில்லைநாதன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). xvii, 226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: