14246 மயக்கத்தை அகற்றி துலங்கும் அறிவு.

ஷேக் முகையுதீன் குருபாவா. கொழும்பு: இலங்கை சூபி (ஞான) விளக்கக் குழு, 139, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: கொம்மேர்ஷியல் அச்சகம், பிரதான வீதி). viii, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. விலங்குகளின் வாழ்வு, பழக்க வழக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 81 குட்டிக் கதைகளின் மூலமாக சூபியிசக் கருத்துக்களை இந்நூலில் வழங்கியுள்ளார். புத்தகப் படிப்பு, மனித உடம்பு, மதி, ஒரு தமிழ்ப் பழமொழி, பிறவிக் கடன், ஆண்டவன் மீது குற்றஞ்சாட்டுதல், அறிவுக்கும் படிப்புக்குமுள்ள தொடர்பு, புனிதமான மனிதர்கள், சமாதி, விஷ்ணுவின் அடையாளம், ஐந்தெழுத்து மந்திரம், கோழி உணவும் வைரமும், ஆசை நாய், பாட்டுக்கும் நடனத்திற்கும் அரசனின் பரிசு, தாமரைப்பூவும் உயிரும், ஒட்டகம், ஓட்டக் குதிரை, கடலாமை, செம்மறி ஆடு, முயல் குட்டிகள், புல்லுடன் முயலின் கோபம், மரங்களில் தங்குமபறவைகள், பாம்பின் விஷப்பற்கள், ஓணானுக்கு மாடு விற்றல், அரணை, நண்டு, உடம்பின் விளக்கம், கொக்கின் விளக்கம், கோழி முட்டையின் விளக்கம் என இன்னோரன்ன தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 03091).

ஏனைய பதிவுகள்

Poker Means Which have Faraz Jaka

Blogs To try out Limped Bins Since the Bb Inside Mtts Bonus Tips Having Made me Victory Plenty of Hemorrhoids Away from Limpers Simple tips

14981 பார் புகழும் பதி பன்னாலை.

நூல் ஆக்கக் குழுவினர். தெல்லிப்பழை: திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா வெளியீடு, பன்னாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 225 பக்கம், புகைப்படங்கள், வரைபடம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5