பிளன்டினா மகேந்திரன், சிரானி அனுசியா அன்ட்ரூ (ஆங்கில மூலம்), J.P.A. றஞ்சித்குமார். யாழ்ப்பாணம்: அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம், யாழ்ப்பாண மாவட்டம், 1வது பதிப்பு, மார்கழி 2012. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. நான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இவ்வறிக்கையின் முதலாவது அத்தியாயத்தில் ஆய்வுப் பிரதேசம், ஆய்வின் நோக்கங்கள், ஆய்வின் முறையியல், ஆய்வின் வரையறைகள், கருத்தியல் ரீதியான வரைவிலக்கணம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் சமுதாய அணிதிரட்டலின் கொள்கை மற்றும் இலக்கு, சமுதாய அணிதிரட்டலின் அளவீடு, சமுதாய அணிதிரட்டலுக்கான தேவைப்பாடுகள், சமுதாய அணிதிரட்டலின் படிமுறைகள், சமுதாய அணிதிரட்டல் சக்கரம், சமுதாய அணிதிரட்டலை ஒழுங்கமைப்பதிலபங்குதாரர்களின் வகிபங்கு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களில் சமுதாய அணிதிரட்டல், சமூக வலுவூட்டல், சமூக வலுவூட்டலில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு, சமூக வலுவூட்டலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், சமூக நிலை மாற்றம் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் அத்தியாயத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டலுடன் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள், யாழ்ப்பாணத்தின் சமூக-கலாச்சார நிலைக்கேற்ற சமூக அணிதிரட்டல் செயன்முறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் சமூக அணிதிரட்டல் மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகள், சமூக அணிதிரட்டல் மற்றும் சமூக வலுவூட்டலுடன் தொடர்புடைய அரசாங்கத்துடன் சம்பந்தமுடைய பிரச்சினைகள், சமூக மட்ட அமைப்புகளுடனான சமூக அணிதிரட்டல் மற்றும் வலுவூட்டல், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளில் சமூக விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. நான்காவது இறுதி அத்தியாயத்தில் முடிவுரையும் சிபார்சுகளும் இடம்பெறுகின்றன. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).