ஜெயந்தன் (இயற்பெயர்: செபஸ்தியாம்பிள்ளை போல் ஜெயந்தன் பச்சேக் அமதி). மன்னார்: விக்ரறீஸ் மீடியா, பேசாலை, 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xxiv, 92 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-624-5112-00-5. நாம் அன்றாடம் கடந்துபோகும் பல விடயங்களின் பால் கூரிய பார்வையையும் சுய விமர்சனத்தையும் வேண்டிநிற்கும் சிந்தனை விரிதளத்திற்கு எம்மை ஜெயந்தன் அடிகளார் இட்டுச் செல்கிறார். களம் இது தான், தகவல் மையமும் சிந்தனையும், மனம்-சம்பிரதாயம்-புத்தி, கறிக்குழம்பும் சுயகுலமும், திருவிழா: சும்மா அந்த மாதிரி, சத்தமே நஞ்சாக, எர்வா மார்டீனும் எதிர்காலமும், கூடிவிளையாடு, எல்லை கடக்கும் தொல்லை, நீராவியும் புட்டுக் குழலும், முன்னேற இடமுண்டு, போலி மார்க்கம், தோற்றுப்போன கல்வி, செஞ்சோற்றுக் கடனுக்காக, கொழுத்த குட்டியும் மெலிந்த குழந்தையும், ஒன்று ஒன்று ஸ்ரீ மூன்று, சீனக்குபேரன், தெய்வங்கள் தேவையில்லையா?, மடைமைத்தனமும் மூலதனமும், பாரபட்சம், பேயும் புத்தியும், சிபாரிசும் சாபம், இதற்குத்தானா இந்தப்பாடு? போங்கடா நீங்களும் உங்கட, எங்கள உய்ய விடயிலயே, மணியந்திடல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மனிதன் கடவுளுக்கே படியளக்கிறான், ஞாயிறு விடுமுறை, எதிர்த் தாக்கம், புதுவரவு ஏமாற்றம், வளத்தின் நிறம்தான் என்ன?, தக்கன பிழைக்கும், நித்தியத்திற்கும், வரப்புயர, எல்லோரும் எழுதலாம், அதே அளவையால் உங்களுக்கும், வெள்ளைக்கார சம்பந்தி, கடவுளையே மறைக்கும் பக்தி, அருளும் பொருளும், தீயை மூட்டவே, தமிழுக்கென்றொரு பெயர், நேற்றுத்தான் விஞ்ஞானி, இறக்குமதிச் சிரிப்பு, திரண்டால் மிடுக்கு, இருக்கவே இருக்கிறது, வேலை தெரிந்தவன் ஆகிய 46 தலைப்புகளில் எமது சமூகத்திலவேண்டிநிற்கும் நடைமுறை மாற்றங்களையும் சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தும் பத்தி எழுத்துக்கள் இவை.