14252 இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை.

லக்ஷ்மன் ஜயத்திலக்க (ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு 3: இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு, கிராமோதய நிலையம், 152, காலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xviii, 138 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 34.10, அளவு: 24×15 சமீ. இளைஞர்களிடையே நிலவும் விரக்தி, அமைதியின்மை, சஞ்சலம் என்பவற்றுக்கான காரணங்களை கூர்ந்து நோக்கி இத்தகைய மனப்பாங்குகள் இல்லாதொழிக்கும் வழிமுறைகளைத் தேடும் வகையில் அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இது. பொதுமக்களிடமிருந்து 1862 எழுத்துமூலமான முறையீடுகளையும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உறுப்பினர்கள், அரசியற் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளிட்ட 520பேரிடமிருந்து வாய்மொழி வாக்குமூலங்களையும் இவ்வாணைக்குழுவினர் பெற்றுள்ளனர். இளைஞர் அமைப்புகள், அரசாங்க, தனியார் துறைகள், கல்வி, உயர்கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் சமயக் குழுக்கள், அரசுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நூற்றுக்கு மேற்பட்டோரும் இங்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர். கண்டி, மாத்தளை, தெல்தெனிய, யாழ்ப்பாணம், காலி, அனுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளனர். இவ்வாணைக்குழுவில் லக்ஷ்மன் ஜயத்திலக்க, ஜீ.எல் பீரிஸ், ராதிகா குமாரசுவாமி, ஏ.எஸ்.முகமது அலி, ஆ.ரி.அலஸ், மொனிக்கா ருவன்பதிரான, சவீந்திர பர்ணாந்து, லால் குருகுலசூரியா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22676).

ஏனைய பதிவுகள்

Vampire Web browser Game

Articles Aaron Rodgers Will not Come back to the brand new Pat Mcafee Let you know In 2010 After Jimmy Kimmel Conflict: the way it