கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424 A , காங்கேசன்துறை வீதி). iஎ, 162 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISDN: 1391-9156. இவ்விதழில், நுழைவாயில் (பனுவல் ஆசிரியர் குழு), படமும் பாடமும்: காலனிய யாழ்ப்பாணத்தில் ஓவியத்தின் நவீனத்துவமும் இருமை நிலையும் (தா.சனாதனன்), வட இலங்கையில் மது விலக்குப் போராட்டம்: தமிழ் அரசியல் தலைமைத்துவமும், சமூக யதார்த்தமும் 1900-1936 (சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்), பாலங்களாக மணப்பெண்கள்: இடப்பெயர்வுகள், பாத்திரங்கள், ஆவணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளினூடே தமிழ்த் தன்மை (சித்தார்த்தன் மௌனகுரு), உடல்அரசியல்கள்: நவீன இந்தியாவில் தேசப்படங்கள் மற்றும் பெண்கடவுளர்கள் (சுமதி ராமசுவாமி), பனுவல் நூல் திறனாய்வு: யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் மடமும் மடக் கட்டிடக் கலையும் (ச.கார்மேகம்), வரலாற்றைக் கட்டுதலும், அவிழ்த்தலும்: இலங்கை வரலாறு தொடர்பான கலாநிதி கா.இந்திரபாலாவின் மறுவாசிப்பு (பாக்கியநாதன் அகிலன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், கலைச்சொற்றொகுதியும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 73488).
17198 ஈழத்தில் சாதியம் தொடர்பான புனைவு அல்லாத சில நூல்கள்.
என்.செல்வராஜா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலைஅகம், அல்வாய், 1வது பதிப்பு, 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-0958-50-4. ஈழத்தின் இலக்கியப்