14261 தமிழர் பண்பாடு. ந.சி.கந்தையாபிள்ளை.

சிங்கப்பூர் 209727: E.V.S. பப்ளிஷர்ஸ், 16, Cuff Road மீள்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISDN: 981-3010-21-5. 1961 ஆம் ஆண்டளவில் ‘இந்துசாதனம்” வார இதழில் தமிழர் பண்பாடு தொடர்புள்ள பல கட்டுரைகளை ஆசிரியர் தொடர்ந்து எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் தொகுப்பு தமிழர் பண்பாடு என்ற நூலாக 1966ஆம் ஆண்டளவில் தமிழகத்தில் வெளிவந்திருந்தது. இந்நூல் அதன் மீள்பதிப்பாக சிங்கப்பூரில் வெளிவந்துள்ள பிரதியாகும். போதிய வெளியீட்டு விபரங்கள் தரப்படவில்லை. பண்டைக்காலத் தமிழகம், கடல்கோள், மக்கள் வடக்கு நோக்கிச் சென்று குடியேறுதல், கற்காலம், சிந்துவெளி நாகரிகம், ஆரியர் வருகை, இதிகாசங்களும் தமிழ்நாடும், புராணங்களும் தமிழ்நாடும், தமிழ்நாட்டெல்லை, தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, ஈழநாடு, மீனோவர் நாடும் தமிழகமும், ஈழமும் தமிழகமும், பினீசியா நாடும் தமிழகமும், ஆசியா மைனரும் தமிழ்நாடும், சீனாவும் இந்தியாவும், தென்னிந்தியர் குடியேறிய நாடுகள், பர்மா, மலாயா, சுமாத்திராவும் சாவகமும், போர்ணியோவும் பாலியும், பிலிப்பைன் தீவுகள், தாய்லாந்து (சீயம்), கம்போடியா, அங்கோர்வாட், சம்பா, ஊர், சிறுகுடி, பாடி, பாக்கம், மருத நிலத்து ஊர், பறந்தலை, நாடும் நகரும், பட்டினம், மக்கட்பாகுபாடு, அரசன், ஆட்சி, உணவு, உடை, நெசவு, உழவு, வாணிகம், வழிபாடு, கோயில், பார்ப்பார், தத்துவஞானம், கல்வி, கைத்தொழில்கள், ஆபரண அலங்காரங்கள், பொழுதுபோக்கு, இசை, போர், படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை, போர்க் கட்டளைகள், அணிவகுப்பு, போர் ஆயுதங்கள், கோட்டையும் பாசறையும், நம்பிக்கைகள், போக்குவரத்து, ஓவியம், சிற்பம், மருந்து, இரேகை நூல், வானாராய்ச்சி, செல்வன் வாழும் மாளிகை, கூத்து ஆகிய 75 தலைப்புகளில் இந்நூல் விரிந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48632).

ஏனைய பதிவுகள்

Qué Es Algún Página web

Content 5 tragamonedas de carrete dinero real: Formato De Tema ¿lo que Serí­a La Impronta Sobre Algún Sitio web? Provee Tema Al día “una Trato