14262 சகவாழ்வுக்கான அறிவு (Wisdom for Good Co-excistence).

சிட்னி மார்க்கஸ் டயஸ் (மீளுருவாக்கமும் தொகுப்பும்), எஸ்.ஏ.சீ.எம். கராமத் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, இணை வெளியீடு, > Colombo 07: Deutsche Gesellschaft fur Internationale Zusammenarbeit (GIZ) GmbH-Facilitating Initiatives for Social Cohesion & Transformation (FLICT), 207/17, Dharmapala Mawatha,1வது பதிப்பு, நவம்பர் 2011. (கணேமுல்ல: ஜெயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், கலஹிட்டியாவ). எiii, 88 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப் படவில்லை, விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISDN: 978-955-1848-67-5. சகவாழ்வுக்கான அறிவு நூலில் கடந்த நான்கு தசாப்தத்தில் இலங்கைச் சமூகத்திலும் தொடர்புத் துறையிலும் ஏற்பட்ட முறையற்ற நிலைப்பாடுகளுக்கு மத்தியில் எடுத்துக்காட்டான மனிதநேயத் தன்மையை வெளிப்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பு இதுவாகும். யுத்தம் மோதல் போன்ற பயங்கரப் பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் தனிப்பட்ட சமூக வாழ்வில் இடம்பெற்ற இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் மிகுந்த சந்தர்ப்பங்களை இச்சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இங்கு பேசப்படும் விடயங்கள் சர்வதேச மானுட நல்லறவுக்கு அழைப்பு விடுப்பதாயும் அமைந்துள்ளன. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இவை. பெரும்பாலும் இனமத உணர்வுகளைப் புண்படுத்துகின்ற மானிட உறவைத் துவம்சம் செய்கின்ற சம்பவங்களையே ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் கேட்டு சோர்ந்து போயுள்ள எமக்கு, அவற்றிடையே காணப்பட்ட உண்மையான மனிதநேயம் பேணி பகிர்ந்துகொண்ட விடயங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. நல்வாழ்வுக்கான அறிவு, புதுவாழ்வுக்கான அறிவு, சகவாழ்வுக்கான அறிவு, நல்லாட்சிக்கான அறிவு என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. அத்தொடரில் வெளிவரும் மூன்றாவது நூல் இது.

ஏனைய பதிவுகள்

12943 – நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

மு.வி.ஆசீர்வாதம். யாழ்ப்பாணம்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழா ஞாபக ஏடு, மு.வி.ஆசீர்வாதம், 49, கண்டி வீதி, 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 12 பக்கம், விலை: 75 சதம், அளவு:

14911 அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள்: புதிய வெளிச்சம்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. சாய்ந்தமருது 05: மருதம் கலை இலக்கிய வட்டம், 129B, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 14: டலஸ் கிராப்பிக்ஸ்). viii, 56 பக்கம், விலை: ரூபா 150.,

14236 லீலா வினோதன் முருகன்.

பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). ஒஎi, 60 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா

12096 – சின்மயாக்னி.

பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா. கொழும்பு: பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா, ஆச்சாரியர், இலங்கை சின்மயா மிஷன், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு: திருநீலகண்டன், லக்ஷ்மி பிரின்டர்ஸ்). (8), 141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14225 பஜனை பாடல்கள்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி). v, 170 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15

12647 – தடை தாண்டல், பதவி உயர்வுகள், நேர்முகப் பரீட்சைகள்.

ஏ.எல்.எம். பளீல். ஸ்ரீலங்கா: பல்கலைக் கல்வி நிலையம், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 8+31+60+16+27 பக்கம், விலை: ரூபா 199., அளவு: 23×18 சமீ. ஒவ்வொரு