14263 பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்.

ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், சு.நிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி (தொகுப்பாசிரியர் குழு). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 85 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. பால்நிலை சமத்துவம், பெண்நிலைவாதம், பற்றிய மூன்றாவது கண் நண்பர்களின் புரிதலும் செயற்படுத்தலும் பற்றிய கடந்த 10 வருடகால அனுபவங்களின் பகிர்வு இது. ஓயுமா-கவிதை (ச.ஸ்ரீபன்), பால்நிலைச் சமத்துவம் நோக்கிய எனது பயணம் (ஜோ.கருணேந்திரா), வேண்டாம் வேண்டாம் வேண்டாம் (செ.ஜோண்சன்), பெண்ணிலைச் சிந்தனைகள் என்னுள் வந்தவிதம்-ஓர் அனுபவப் பகிர்வு (துரை. கௌரிஸ்வரன்), ஓவியர் நிர்மலவாசனுடனான சந்திப்பு (கி.கலைமகள்), ஆளுமை கொண்ட ஆண்கள் பால்நிலை சமத்துவத்தை உள்வாங்கி வாழ்பவர்கள் (சி.ஜெயசங்கர்), இச்செயற்பாடு பற்றி (செ.ஜோண்சன்), மூன்றாவது கண் உள்;ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய செயல்வாதப் பயணம்: புகைப்படக் கதை, மூன்று கவிதைகள் (மோ. குகதாஸ்), நியாயக் கும்மி (ஜோ.கருணேந்திரா), பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருதலை நோக்கிய எமது பாதையை நாமே வடிவமைப்போம் (கமலாவாசுகி-ஆங்கில மூலம், ஜோ.கருணேந்திரா-தமிழாக்கம்) ஆகிய பன்னிரு ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12912 – எங்கள் ஜனாதிபதி.

ராஜா திவ்வியராஜன். கொழும்பு 3: ராஜா திவ்வியராஜன், 532, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: நிர்மால் அச்சகம், ஜெம்பட்டா). 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5 x

12826 – பேஸ்புக்கில் அந்த அழகிய முகம்.

வி.ஜனகன். கொழும்பு: மஸ்ட்ரோ மயின்ட்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கொழும்பு: தேவி அச்சகம்). 170 பக்கம், விலை: ரூபா 325.00, அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-725-500-2.