கம்லா பாசின். கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425ஃ15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 2000. (நுகெகொட: தீபானி அச்சகம், 464, ஹைலெவல் வீதி, கங்கொடவில). iஎ, 49 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISDN: 955-9102-33-8. இந்நூல் மட்டுப்படுத்தப்பட்ட கல்வி அறிவுகொண்ட மக்களுக்காக கம்லா பாசினால் எழுதப்பட்டது. இது ஜகோரி (Jagori) என்ற பெண்ணிய வள நிறுவனத்தால் முதலில் வெளியிடப்பட்டது. Proshika என்ற மானிட அபிவிருத்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து பல ஆண்டுகளானபோதும் சமூகத்தில் பெண் இரண்டாம்தரப் பிரஜையாகவே கணிக்கப்படுகிறாள். அவளுக்குத் தாராளமான அன்பு, ஆதரவு, சத்துணவு, உடல் நலக் கவனிப்பு என்பன மறுக்கப்படுகின்றன. ஆண்களுக்குவெண்ணெய்-பெண்களுக்கு மோர் என்ற நிலைப்பாடே மக்களின் மனங்களில் நிலைகொண்டுள்ளன. இந்நிலையில் குடும்பத்தில் இத்தகைய பேதநிலையை துடைத்தெறியும் வகையில் இச்சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. எமது பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் பாரபட்சமின்றிக் குடும்பத்தில் நடத்தப்படவேண்டும் என்பதையும், ஆண் பிள்ளைகள் சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாத்திரங்களாக இயங்கக் கட்டாயப்படுத்தப்படக்கூடாதென்பதையும் எளிமையாக இந்நூல் வாசகரிடம் சிந்தனையை தோற்றுவித்து புரியவைக்கின்றது. பிந்தியா தோபரின் சித்திரங்கள் நூலின் கருத்துக்கு மேலும் தெளிவூட்டுவதாயுள்ளன.