14266 அரசறிவியல் அறிமுகம். எஸ்.கீதபொன்கலன்.

கொழும்பு: சந்தியாபிள்ளை கீதபொன்கலன், விரிவுரையாளர், வரலாற்று அரசறிவியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 12: சீ.வீ.ஆர். பிரின்டர்ஸ், குணசிங்கபுர).vii, 164 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ. அரசியல் விஞ்ஞானம், அரசு, இறைமை, சட்டம், உரிமைகள், ஜனநாயகம், மார்க்சிஸம், பாசிஸம் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் அரசறிவியலை சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகம் செய்கின்றது. எஸ்.கீதபொன்கலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பட்டப்படிப்பினை மேற் கொண்டவர். பட்டதாரியாக வெளியேறியபின் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் விரிவுரையாளராக நியமனம் பெற்றவர். அக்காலகட்டத்தில் இந் நூல் இவரால் எழுதப்பட்டது. இவரது பல்வேறு சமகால அரசியல் கட்டுரைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்து இவரை அரசியல் புலமை மிக்கவராக மக்களிடையே இனம்காட்டியிருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28253).

ஏனைய பதிவுகள்