ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈ ஃபின், மத்தியூ ஹன்டல், எரிக் செனோவத் (ஆங்கில மூலம்)இ சோ.சந்திரசேகரன், டி.தனராஜ், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்).கொழும்பு 5: மார்கா நிறுவகம், 61, ,சிப்பத்தன மாவத்தைஇ 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் ‘சனநாயகம் என்றால் என்ன?” என்ற பகுதி-1 இல் சனநாயகத்தின் வரைவிலக்கணம், உரிமைகள், சட்ட ஆட்சி, தேர்தல்கள், சனநாயக பண்பாடு, சனநாயக அரசாங்கம், அரசியல் பொருளியல் பன்மைவாதம் ஆகிய ஏழு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியல்” என்ற பகுதி-2 இல் குடியுரிமையும் அரசியல் பங்குபற்றலும், அரசியல் கட்சிகள், பொதுத் தேர்தலும் பிரச்சாரமும், கொள்கையை உருவாக்கும் ஒருவராக அரசியல்வாதி, தொடர்புச் சாதனங்கள் ஆகிய நான்கு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 21552).
14381 கல்வி பொதுத்தராதர பத்திரம் (உயர் தரம்) ஆண்டு 12-13: பொறியியல் தொழினுட்பவியல் பாடத்திட்டம்.
தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொழினுட்பக் கல்வித் துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2016. (மஹரகம: தேசிய கல்வி நிறுவக அச்சகப் பிரிவு). vii, 75 பக்கம்,