ஜோன் பி.பிராங், செஸ்டர் ஈ ஃபின், மத்தியூ ஹன்டல், எரிக் செனோவத் (ஆங்கில மூலம்)இ சோ.சந்திரசேகரன், டி.தனராஜ், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்).கொழும்பு 5: மார்கா நிறுவகம், 61, ,சிப்பத்தன மாவத்தைஇ 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் ‘சனநாயகம் என்றால் என்ன?” என்ற பகுதி-1 இல் சனநாயகத்தின் வரைவிலக்கணம், உரிமைகள், சட்ட ஆட்சி, தேர்தல்கள், சனநாயக பண்பாடு, சனநாயக அரசாங்கம், அரசியல் பொருளியல் பன்மைவாதம் ஆகிய ஏழு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஒரு சுதந்திர சமுதாயத்தில் அரசியல்” என்ற பகுதி-2 இல் குடியுரிமையும் அரசியல் பங்குபற்றலும், அரசியல் கட்சிகள், பொதுத் தேர்தலும் பிரச்சாரமும், கொள்கையை உருவாக்கும் ஒருவராக அரசியல்வாதி, தொடர்புச் சாதனங்கள் ஆகிய நான்கு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 21552).