14272 இலங்கைத் தமிழ் அரசியல்: இனமோதலும் மிதவாதமும்.

கந்தையா சர்வேஸ்வரன். யாழ்ப்பாணம்: தொழில்துறை மற்றும் பட்டப் படிப்பகம், School of Professional and Degree Studies, கட்டப்பிராய், கோப்பாய் தெற்கு, கோப்பாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).xxii, 555 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21×15.5 சமீ., ISDN: 978-955- 35924-0-8. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது கலாநிதிப் பட்டத்திற்கான ஆங்கில மொழியில் மேற்கொண்ட ஆய்வேட்டின் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது. மிதவாத இனத்துவக் கட்சிகளின் எழுச்சியும் சரிவும்-ஒரு கோட்பாட்டியல் வரையறை, காலனித்துவ காலத்தில் இனத்துவ அரசியல், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றம்-ஓர் அரசியல் பின்னணி (1947-1976), தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈழமும், சூடுபிடித்த களத்தில் செல்வாக்கிழந்த மிதவாதம், இருப்பிற்கான போராட்டம் (1987-2000), தமிழ் மிதவாதம் புகட்டும் பாடங்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பேராசிரியர் சகாதேவனின் அணிந்துரையின் ஆங்கில மூலம், ஈழ தேசிய விடுதலை முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஆங்கிலம்), உசாத்துணை நூற்பட்டியல் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. 1960ஆம் ஆண்டு கட்டப்பிராயில் பிறந்த கந்தையா சர்வேஸ்வரன், 1981இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞான சிறப்புக் கலைமாணிப் பட்டப்படிப்பைத் தொடங்கியவர். இனமோதல் காரணமாக கல்வியைத் தொடரும் நோக்கில் தமிழகம் சென்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்து முடித்தவர். 1988இல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் முதுமாணிப் பட்டத்தையும், 2005இல் சர்வதேச உறவுகள் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். 1994முதல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின்னாளில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

14851 நினைவுகளும் கனவுகளும்.

வே.சு.கருணாகரன். புங்குடுதீவு: சூழலியல் மேம்பாட்டு அமைவனம் (சூழகம்), 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: சண் பதிப்பகம், இல. 44A, ஸ்ரீ கதிரேசன் வீதி). xiii, 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12323 – தொலைக் கல்விப் பாடநெறிகள்: கைந்நூல்.

தொலைக் கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: Pacific Press). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. தொலைக்கல்வி ஆசிரியர் கல்விப்

14747 உறவும் பிரிவும்.

மு.ளு.ஆனந்தன். யாழ்ப்பாணம்: இணுவில் தமிழ்மன்ற வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1964. (சுன்னாகம்: நாமகள் அச்சகம்). (2), 61 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20×13.5 சமீ. காதலை முதன்மைப்படுத்தும் இக்குறுநாவலில்

14310 கிழக்கு ஆசியாவின் அற்புதம்: பொருளாதார வளர்ச்சியும் பொதுக் கொள்கையும்.

கொயிச்சி ரானி, உலக வங்கி (ஆங்கில மூலம்), எஸ்.அன்ரனி நோபேட், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்கா நிறுவகம், 61, இசிப்பத்தன மாவத்தை, 1வது

12753 – இலக்கிய விழா 1990-1991: சிறப்பு மலர்.

எஸ்.எதிர்மன்னசிங்கம் (மலர்க் குழுவினர்சார்பில்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14578 உயிர் விதைப்பு (கவிதைகள்).

சோதியா (இயற்பெயர்: சிவதாஸ் சிவபாலசிங்கம்). நோர்வே: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், தாய்நிலம் பதிப்பகம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, மாசி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: 50 குரோணர்கள், அளவு: