14274 இலங்கையில் பின்காலனித்துவ அரசு.

ஜயதேவ உயன்கொட (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு: க.சண்முகலிங்கம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம் அவர்களின் சேவையினைப் பாராட்டும் முகமாக வுhந Pழடவைiஉயட நுஉழழெல ழக நுnஎசைழnஅநவெ யனெ னுநஎநடழிஅநவெ in வாந புடழடியடளைநன றழசடனநஒpடழசiபெ கசழவெநைசள என்னும் நூல் கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் 2012இல் வெளியிடப்பட்டது. அந்நூலில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரை ‘பிரவாதம்” பருவ இதழின் மே-செப்டெம்பர் 2012 (எண் 9-10) இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் தனி நூல் வடிவமே இது. இலங்கையின் பின் காலனித்துவ அரசு தனது ஜனநாயக வடிவத்தை நெகிழ்ச்சியுடையதாக்கி அதனுள்ளே சர்வாதிகார நடைமுறைகளையும் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த அரசு சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து ஜனநாயகத்தை தன்னுடன் வைத்துக்கொண்டது. அதனை முற்றாகத் தூக்கி வீசிவிடவில்லை. ஜனநாயகத்தின் இத்தகைய நெகிழ்வுத் தன்மை காரணமாக இலங்கையில் சர்வாதிகாரம் ஜனநாயகத்தோடு இணைந்து கொண்டது. ஜனநாயகத்துடன் சமரசம் செய்துகொண்ட சர்வாதிகார அரசே இலங்கையில் இன்ற நிலைபெற்றுள்ளது என்று நூலாசிரியர் முடிவுசெய்கின்றார். மேலும், இலங்கையில் ஜனநாயகத்தை மீளவும் உயிர்ப்பிக்கக்கூடிய அமைப்பியல் மாற்றங்களைச் செய்வதை சர்வாதிகார அரசு அனுமதிக்கமாட்டாது என்றும் குறிப்பிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

12705 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்6: அக்டோபர்-டிசம்பர்-2003.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு: விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை: கணேசமூர்த்தி, ஜோதி என்டர்பிரைசஸ்). 159

14499 தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்.

T.சௌந்தர் (இயற்பெயர்: தங்கவடிவேல் சௌந்தர்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பேலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், 1வது பதிப்பு, ஜுலை

12297 – கல்வி உளவியல்(பாகம் 2): கற்றலும் கற்பித்தலும்.

ச.முத்துலிங்கம். கொழும்பு 3: பேராசிரியர் ச.முத்துலிங்கம், கல்வி உளவியல்துறை, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1980. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). (4), 205-423 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 22.,

14741 இச்சா.

ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 2வது பதிப்பு, ஜனவரி 2020, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 304 பக்கம்,

12441 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1992

. மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161,