க.வி.விக்னேஸ்வரன். லண்டன்: சு.னு.இரத்தினசிங்கம், இல. 5, Cawdor Crescent, London W7 2DB, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356யு, கஸ்தூரியார் வீதி). ஒ, 432 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 25.5×18 சமீ. நாட்டுப்பற்றும் தமிழ்ப் பற்றும் மிகுந்த ஓய்வுநிலை உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நீதியரசராக கடமையாற்றிய காலம்தொட்டு வடமாகாண முதலமைச்சராகக் கடமையாற்றிய காலம் வரையில் ஆற்றிய சட்டத்துறை சார்ந்த மறக்கமுடியாத சரித்திரத்தில் இடம்பிடித்த சில முக்கிய உரைகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் புதிய உசாத்துணை நூலகப் பிரிவின் திறப்புவிழா 09.03.2008 அன்று நடைபெற்ற சமயம் வாசிக்கப்பட்ட சட்டமுந் தமிழும் என்ற உரை, ஆயிஷா சுஹைர் அவர்களுக்கு வழங்கிய ஆங்கில மொழிவழி நேர்காணல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் சார்பான திசைநெறிப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் 24.10.2013இல் நடந்தபோது ஆற்றிய உரை, வடமாகாண சபையின் முதலமர்வு அங்குரார்ப்பண நிகழ்வின்போது கைதடி வடமாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் 25.10.2013 அன்று ஆற்றிய முதலமைச்சர் உரை, நல்லூர் பிரதேச சபையினரின் கௌரவிப்பு விழா நல்லூர் பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில் 27.10.2013 இல் நடந்தவேளை ஆற்றிய உரை, வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 01.11.2013 அன்று நடைபெற்ற வேளை ஆற்றிய விருந்தினர் உரை, கொடிகாமம், சாவகச்சேரி பிரதேச சபை உள்;ராட்சி வாரம் கொண்டாடிய வேளை 22.11.2013 அன்று இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆற்றிய முதன்மை விருந்தினர் உரை, யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவு சபை கூட்டுறவுப் பெரியார் அமரர் வி.வீரசிங்கம் அவர்களின் மறைவின் 50ஆவது ஆண்டு நினைவுதினக் கூட்டத்தில் 05.12.2014 அன்று ஆற்றிய உரை ஆகியன இதில் அடங்கியுள்ளன.