ரா.ப.அரூஸ். தெகிவளை: ரா.ப. இன்டர்நெஷனல் லிமிட்டெட், தபால் பெட்டி எண் 21, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ரா.ப. இன்டர்நெஷனல் லிமிட்டெட், தபால் பெட்டி எண் 21). ஒஎi, 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISDN: 978-955-52299-6-8. நல்ல மானுடம் விதைப்போம், அநீதிகள் யாவையும் குழி தோண்டிப் புதைப்போம் என்ற பதாதையுடன் இந்நூல் சமூக சிந்தனை கொண்ட எழுத்தாளர் அரூசினால்எழுதப்பட்டுள்ளது. சமூகப் பண்பாடுகளில் வீழ்ச்சி, அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி மேலும் இத்தகைய நிலை வரலாகாது என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. டெல்லி மாணவியின் மரணம் எமக்கு விட்டுச் சென்றுள்ள செய்தி, தமிழ்த் தலைமைகளின் அரசியல் நாகரீகமும் முஸ்லிம் தலைமைகளின் பேரினவாதத் தாவல்களும், மக்கள் வழங்கிய ஆணை பூனையாகிப் போன கதை, பெருகிவரும் இளவயதுத் தவறுகளுக்கு யார் காரணம்?, அதுவும் சரிதான் இதுவும் பிழையில்லை, இலங்கைத் தமிழர்கள்: முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் பின்னரும், கறுப்புச் சந்தை வியாபாரத்தை திறைசேரி வெள்ளையாக்கியுள்ளது, முஸ்லிம் காங்கிரஸ்: ஆவேசப்படுதலும் அடங்கிப் போதலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பொறியியல்பீடம் சாதிக்கப்போவது என்ன?, தற்கொலைக்கே வித்திடும் நாட்டின் தரமற்ற பொருளாதாரம், தமிழ் பேசுவோர் உறவு தளைத்தோங்க வழிசெய்வோம், ஆசிரிய தலையங்கங்கள் ஆகிய பன்னிரு சமகால அரசியல் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.