14284 காடு சார்ந்த மேட்டுநிலக் கமத்தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ள உலர்வலய சமுதாயமொன்றில் சிறுவர்உரிமைகளின் தன்மை.

ஆ.ர்.ஆ.சுனில் சாந்த (ஆராய்ச்சியும் கட்டுரையும்), நா.சுப்பிரமணியன் (மொழிபெயர்ப்பு மேற்பார்வை). கொழும்பு 7: ஆசியாவில் அபிவிருத்திக்கான ஆய்வு மற்றும் கல்விப் பணிகள் தொடர்பான முன்னோடி அமைப்பு (இனேசியா), 64, ஹோற்றன் பிளேஸ், 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: Publication Unit of INASIA). (6), 91 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×16.5 சமீ. பல்வேறு சமூகங்களையும் சார்ந்த இலங்கைச் சிறார்களின் உரிமைகளின் தேசிய பயன்பாடு எவ்விதம் இருக்கின்றதென்பதை சமூக விஞ்ஞான பகுப்பாய்வுக்கு உட்படுத்துதல் இவ்வாய்வுத் தொகுப்பின் நோக்கமாகும். தற்கால இலங்கை சமுதாயமும் சிறுவர் உரிமைகளும் நுணுக்கமான அடிப்படையில் ஆராயப்பட்ட சமூக விஞ்ஞான கற்கை என்ற தொடரில் வெளிவந்த 15 அறிக்கைகளில் இது 8ஆவதாகும். சமுதாயத்தின் சிறப்பியல்பு, ஆய்வுப் பிரதேசத்தின் பின்னணி, சமுதாயத்தின் வளங்களும் சமூக நிறுவனங்களும், பொருளாதார அடிப்படையும் வாய்ப்புக்களும், சமூக பொருளாதார அந்தஸ்தை அடைய சமூகம் மேற்கொள்ளும் மக்களின் பல்வேறு உபாய முறைகள், சமூகத்தின் சிறுவர் உரிமையின் இயல்பு. முடிவுரை வினாக்கொத்து ஆகிய இயல்களில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ரெட்பார்ணா நிறுவனத்தின் நிதி உதவியின்கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

Parimutuel Gambling

Content You are Struggling to Availability Betfair Com – golf masters betting sites Sporting events Workplace Swimming pools: step three Demonstrated Ways to get A