14289 யாழ்ப்பாணப் பகுதியில் காணாமற் போனோர் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை.

காணாமற்போனோர் சம்பந்தமான விசாரணைக்குழு. கொழும்பு 8: இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 36, கின்சி றோட், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISDN: 955-8929-08-5. இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினதும் (UNDP), சுவீடன் நாட்டு சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையத்தினதும் (SIDA) அனுசரணையுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப் பட்டது. காணாமற் போனோர் சம்பந்தமான விசாரணைக்குழுவின் உறுப்பினர்களாக கலாநிதி தேவநேசன் நேசையா (தவிசாளர்), திரு. கே.எச். கமிலஸ் பெர்னாண்டோ, திருமதி ஜெசிமா இஸ்மாயில், திரு. எம்.சீ.எம். இக்பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவ்வறிக்கையை வு.தனராஜ் தமிழாக்கம் செய்துள்ளார். வழங்கப்பட்டுள்ள ஆணையும் அதற்குள் அடங்கக்கூடிய முறைப்பாடுகளும், காணாமற்போனமையின் சூழ்நிலையும் அதன் விளைவுகளும், பொறுப்பானவர்கள் மீதான நடவடிக்கைகள், பொறுப்பையும் ஏனைய ஒழுங்கீனங்களையும் தட்டிக்கழித்தல், தடுப்பு ஏற்பாடுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், முடிவுரை ஆகிய ஏழு அத்தியாயங்களில் இவ்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-இடங்களும் காணாமற்போனோரின் எண்ணிக்கையும், காணாமற்போனமையை உறுதிப்படுத்தி குழு சான்றிதழ் வழங்கிய நபர்கள், காணாமற் போனவர்களை கைது செய்தஃகடத்திய அல்லது அதற்குக் காரணமான நபர் எனப்படுபவர்களின் பட்டியல், நிவாரணம் விதந்துரைக்கப்பட்டோர், வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தின் மாதிரிப் படிவங்கள், குழுவின் இடைக்கால அறிக்கை, காணாமற்போனோர் மீதான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை (அகில இலங்கை) யிலிருந்து சில பகுதிகள், தடுப்பு ஏற்பாடுகள் குறித்த காணாமற் போனோர் மீதான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலிருந்து சில பகுதிகள், நட்டஈடு தொடர்பான சுற்றறிக்கை-புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண அமைச்சு, நட்டஈடு பற்றிய பொது நிர்வாக சுற்றறிக்கை, உதயன் பத்திரிகையின் சம்பந்தப்பட்ட பக்கம்: 10.12.1998, விசாரணைக்காக குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் முழுமையான பட்டியல், பத்திரிகை அறிவித்தல், குழு விசாரணை நடாத்திய இடங்கள், காணாமற் போனமைக்குப் பொறுப்பான நபர்கள் பற்றி படைத் தளபதியுடன் மேற்கொண்ட கடிதத் தொடர்புகள், விசாரிக்கப்பட்ட ஒவ்வொரு முறைப்பாடு பற்றியும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் சுருக்கம் ஆகிய விரிவான 16 பின்னிணைப்புகளுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42266).

ஏனைய பதிவுகள்

12502 – விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2004.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). xviii, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: