14292 இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு.

சோமவன்ச அமரசிங்க, ரில்வின் சில்வா. கொழும்பு 10: நியமுவா வெளியீட்டகம், மக்கள் விடுதலை முன்னணி, 198/19, பஞ்சிக்காவத்தை வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (புறக்கோட்டை: ஆர்.சீ. பிரின்டர்ஸ், அன்ட் பப்ளிஷர்ஸ், 70, மிஷன் வீதி). 70 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISDN: 978-955-8696-12-5. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்ற தலைப்பில் தோழர் சோமவன்ச அமரசிங்கவும், இலங்கை பொருளாதாரத்தில் இந்தியாவின் தலையீடு என்ற தலைப்பில் தோழர் ரில்வின் சில்வா அவர்களும் நிகழ்த்திய உரைகளின் சாராம்சம் இது. இந்தியாவின் தலையீட்டினால் இன்று இலங்கையில் திரைமறைவில் நடைபெறும் பல்வேறு செயல்களைப் பற்றிய அறிவு பெரும்பாலான நாட்டு மக்களிடம் இல்லை. இதனை ஒரு கற்பனை எனக் கருதுவோரும் இருக்கின்றனர். இதைப் பற்றிய சரியான தகவல்கள் மக்களைச் சென்றடையாமையே இதற்குக் காரணம். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா ஆகியோரால் 19.09.2008 அன்று கண்டியில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டமொன்றில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவில் தெரிவித்த கருத்துக்களையே இந்த நூல்வடிவில் வழங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14110 இடைக்காடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக சிறப்பு மலர் 22.04.2005.

மலர்க்குழு. இடைக்காடு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), viii, 84 பக்கம்,

14136 தாய்மையின் பொலிவு தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 150ஆவது ஜனன ஆண்டு விழாச் சிறப்பு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 06: ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சமிதி, 59, விவேகானந்தா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). (4),