இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிரான்ட்பாஸ் வீதி). (4), 59 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×16.5 சமீ. 1991ஆம் ஆண்டின் முதலரைப் பகுதிக்கான இலங்கையின் பொருளாதார அளவீடுகள், பொதுவான போக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், விலைகள், வர்த்தகமும் சென்மதி நிலுவையும், அரசநிதி, பணமும் கொடுகடனும் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் அறிக்கையிடப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16879).