ஆதர் பெர்னி (ஆங்கில மூலம்), றெக்ஸ் ரொட்றீகஸ் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ‘சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). ஒiஎ, 376 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. பிரித்தானிய பொருளியலாளரான Arthur Birnie அவர்கள் எழுதி லண்டன் Methuen and Co. வெளியிட்ட An Economic History of Europe 1760-1939 என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். கைத்தொழிற் புரட்சி, விவசாயப் புரட்சி,போக்குவரத்திலேற்பட்ட புரட்சி, வர்த்தகத்திலேற்பட்ட புரட்சி, வர்த்தகக் கொள்கைகளில் ஏற்பட்ட புரட்சி, பணம்-வங்கித் தொழில் முதலீடு, சமூக வுடைமையும் சமுதாயப் பிரச்சினையும், அரசியல் சார்ந்த தொழிலாளர் இயக்கம், கைத்தொழில் சார்ந்த தொழிலாளர் இயக்கம், கூட்டுறவு இயக்கம், இலாபப் பங்கீடும் கூட்டுப் பங்கு வியாபாரமும், தொழிற்சாலைச் சட்டங்கள், வறுமைச் சட்டங்கள், சமூகக் காப்புறுதி, அண்மைக்காலப் போக்குகள் (பொருளாதார ஏகாதிபத்தியம், கைத்தொழிலில் டிரஸ்டு இயக்கம், ரஷ்யப் புரட்சி, அரசுக் கட்டுப்பாடும் பொருளாதார எதேச்சாதிகாரமும், முதலாளித்துவத்தின் கடந்த காலமும் எதிர்காலமும்) முடிவுரை ஆகிய 16 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 23458).