எப்.ஆர்.சயசூரியா (சிங்கள மூலம்), ம.முகம்மது உவைஸ் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). (6), 201 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. பொருளியல் என்றால் என்ன?, பண்டமாற்றும் பெறுமானமும், கேள்வி விதிகளும் சந்தைகளும், கேள்வியின் நெகிழ்ச்சி, ஆக்கம், காரணிகளின் சேர்க்கை, பல்வேறு வகையான தொழிலமைப்புகள், ஆக்கச் செலவுகள், நிரம்பலும் நிரம்பல் விதியும், தேவையும் நிரம்பலும், சந்தைகளும் அவற்றின் அமைப்பும், நிறை வர்த்தகப் போட்டி, தனியுரிமை, நிறைவில் வர்த்தகப் போட்டி, பரம்பற் கொள்கை, வாடகை, சம்பள விதி, வட்டி வீதம், இலாபம், பணம், பணமுறை அமைப்பு, பொருளாதார வீக்கம், வங்கித் தொழின்முறை, வங்கிக் கடன், மத்திய வங்கி, நாடுகளிடை வியாபாரம், வெளிநாட்டு நாணய மாற்று, வியாபாரச் சகடவோட்டம் ஆகிய 28 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38374).