டேவிட் நோர்த். கொழும்பு 10: தொழிலாளர் பாதை வெளியீட்டாளர்கள், இல. 90, 1ஆம் மாளிகாகந்தை ஒழுங்கை, மருதானை, 1வது பதிப்பு, ஜுன் 1993. (மகரகம: பியதாச அச்சகம், இல. 51, நாகஹவத்த வீதி). (2), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISDN: 955-9123-23-8. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆரம்பம் தொடக்கம் அதன் பொதுச் செயலாளராக விளங்கிய தோழர் கீர்த்தி பாலசூரிய நினைவுப் பேருரையாக வெளிவந்துள்ளது. கீர்த்தி பாலசூரிய 1987 டிசம்பர் 18ஆம் திகதி காலமானார். அவரின் மறைவின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக அனைத்துலகக் குழுவின் கிளைகள் உலகம் பூராவும் நடாத்திய கூட்டங்களின் ஒரு அம்சமாக கனடிய ட்ரொட்ஸ்கி அனைத்துலகத் தொழிலாளர் கட்சி (I.W.P) 1993 பெப்ரவரி 6ஆம் திகதி மொன்ட்ரியலில் பொதுக்கூட்டமொன்றை நடாத்தியது. அக்கூட்டத்தில் அமெரிக்க ட்ரொஸ்கிக் கட்சியான வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers’ League) தேசியச் செயலாளர் டேவிட் நோர்த் நிகழ்த்திய உரை இங்கு பிரசுரமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ‘இந்திய-இலங்கை உடன்படிக்கையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளும்” நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கையாக 1987 நவம்பர் 19இல் வெளியாகியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39655).