மலர்க்குழு. கொழும்பு 1: இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட திருவாளர்கள் எற்கின் ஸ்பென்ஸ் கூட்டுநிலையம்). (32), 92 பக்கம், அட்டவணைகள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×25 சமீ. இவ்வெள்ளி விழா மலரில் நாணயச்சபை 1950-1975, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்கள் 1950-1975, இலங்கை மத்திய வங்கி 1950-1975 (கட்டுரை), இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு மதிப்பீடு, 1950-1975 (கட்டுரை) ஆகிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவினராக தலைவர் ஜே.ஜீ.பி. ஜயசுந்தர, ஆர். இ.குணசிங்க, டபிள்யூ எட்டியாரச்சி, துணை ஆளுநர்களான டபிள்யூ. இராசபுத்திரம், எச்.எல்.டி. செல்வரத்தினம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13455).