14307 இலங்கை மத்திய வங்கி: அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள் 2002இன் முக்கிய பண்புகளும் 2003இற்கான வாய்ப்புகளும்.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு: லேசர் கிராப்பிக் லிமிட்டெட்). (4), 97 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. இவ்வறிக்கையில் முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகள், அறிமுகம், வெளியீடும் பொருளாதார வளர்ச்சியும், மொத்தக் கேள்வியும் சேமிப்புகளும், விலைகளும் கூலிகளும், தொழிற் சந்தை, வேளாண்மை, கைத்தொழில், உட்கட்டமைப்பும் பணிகளும், அரசநிதி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, சென்மதி நிலுவையும் செலாவணி வீதமும், பணம் கொடுகடன் மற்றும் வட்டி வீதங்கள், புள்ளி விபரப் பின்னிணைப்புகள் ஆகிய பிரிவுகளின் கீழ் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34075).

ஏனைய பதிவுகள்

12718 – கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி). .xi, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா