சீமாஸ் கிளாரி (அபிவிருத்தி ஆலோசகர்), ரிச்சர்ட் றியோச் (தலைவர்), ப்றைன் வோல்ப் (நிறைவேற்று செயலாளர்). லண்டன் ளுறு8 1ளுது: இலங்கைக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், இல. 3, பொண்ட் வே, 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்தன அவென்யூ).(4), 67 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ. உலக வங்கியின் வறுமை மதிப்பீடு பற்றிய எதிர்வினைகள். இது இலங்கை அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்திற்கான ஒரு அறிக்கை. இவ்வறிக்கையில் இலங்கையின் வறுமை பற்றிய கலந்துரையாடல், வறுமையின் பரப்பெல்லை, வறுமையின் இருப்பிடங்களைக் கண்டுகொள்ளல், மனித அபிவிருத்தி அனுபவங்கள், பரிந்துரைகள், வளங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24326).