கொயிச்சி ரானி, உலக வங்கி (ஆங்கில மூலம்), எஸ்.அன்ரனி நோபேட், மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்கா நிறுவகம், 61, இசிப்பத்தன மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டB, புளுமெண்டால் வீதி). 86 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இத்தொகுதியானது, சந்தைப் பொருளாதாரத்தின் இயல்பும் அதன் செயற்பாடுகளும் பற்றிய ஐந்து வெளியீடுகளில் நான்காவதாகும். இந்நூலில் இரண்டு பொருளாதாரக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதலாவது, ‘கிழக்காசியாவின் அற்புதம்: பொருளாதார வளர்ச்சியும் பொதுக் கொள்கையும்” என்பதாகும். இது உலக வங்கியின் ஒரு கொள்கை ஆய்வு அறிக்கை. இதனை கொழும்புப் பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் எஸ்.அன்ரனி நோபேட் தமிழாக்கம் செய்துள்ளார். கிழக்காசியாவின் வெற்றியை விளங்கிக்கொள்ளல், சூழ்நிலைகள், பொதுக்கொள்கைகள் மற்றும் வளர்ச்சி, பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் ஏற்றுமதி வளர்ச்சியையும் அடைந்துகொள்ளல், வளர்ச்சிக்கு நிறுவனரீதியான தளத்தைக் கட்டியெழுப்புதல், மனித மற்றும் பௌதீக மூலதனத்தைத் திரட்டுதல், செயற்றிறன் மிக்க ஒதுக்கீட்டினையும் உற்பத்தித் திறன்மிக்க மாற்றத்தினையும் அடைந்துகொள்ளல், ஏனைய வளர்முகப் பொருளாதாரங்களுக்கான படிப்பினைகள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இவ்வறிக்கை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டுரை கொயிச்சி ரானி, அவர்கள் எழுதிய ‘போருக்குப் பின்னரான யப்பானின் பொருளாதார உருமாற்றத்தில் பொருளாதாரத் திட்டத்தின் பங்கு” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதனை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை விரிவுரையாளர் மா.கருணாநிதி தமிழாக்கம் செய்துள்ளார். இக்கட்டுரை போருக்குப் பின்னரான பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பகால விருத்தி, பொருளாதாரத் திட்டமும் தேசிய பொருளாதாரத்தின் பேரினபபொருளாதாரக் கொள்கை முகாமைத்துவமும் ஆகிய இரு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 22041).