14311 சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?

மைக்கல் வாட்ஸ், எஸ்ரா சொலமன் (ஆங்கில மூலம்), டி.தனராஜ், எஸ்.அன்ரனி நோபேட் (தமிழாக்கம்), எஸ். அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்கா நிறுவகம், 61, இசிப்பத்தன மாவத்தை, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இருபகுதிகளாக வகுத்து எழுதப்பட்டுள்ள இந்நூலின் ‘சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?” என்ற முதலாவது பகுதியில் அறிமுகம், திட்டமிட்ட பொருளாதாரமும் சந்தைப் பொருளாதாரமும், சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோர், சந்தைப் பொருளாதாரத்தில் வர்த்தகம், சந்தைப் பொருளாதாரத்தில் தொழிலாளர், சந்தை முறைமை, சந்தைப் பொருளாதாரத்தில் நிதி, சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கம் ஆகிய ஏழு அத்தியாயங்கள் உள்ளன. ‘ஒரு சுதந்திர சமுதாயத்தில் பொருளாதாரம்” என்ற இரண்டாவது பகுதியில், அறிமுகம், சந்தை முறைமை, அடம்ஸ்மித்தும் மறைமுகக் கரமும், விலைகளின் பங்கு, ஒரு சந்தை முறைமையின் ஒழுங்கமைப்பு, சுதந்திர சந்தையின் அனுகூலங்கள், சந்தைப் பொருளாதாரங்களில் அரசாங்கத்தின் பங்கு, ஸ்மித்தின் பொருளாதாரத்தின் தாக்கம்: ஐக்கிய அமெரிக்கா குறித்த ஓர் ஆய்வு, சுதந்திர சந்தையும் கெயின்சியப் புரட்சியும், கெயின்சும் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பும், சுதந்திர சந்தையும் உழைப்பும், கெயின்சின் காலம், அடம் ஸ்மித்துக்குத் திரும்புதல் ஆகிய பன்னிரண்டு அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 022071).

ஏனைய பதிவுகள்

Lord Of The Ocean Slot Für nüsse Spielen

Content Book Of Ra Fixed Maklercourtage Bonusrunden Diamond Strike Für nüsse Zum besten geben Abzüglich Registrierung: Sic Funktioniert Dies Gewinne & Einsätze Sekundär In Book

12048 – இந்துக்களின் சடங்குகள்.

இந்து மகளிர் மன்றம். யாழ்ப்பாணம்: அமரர் ஆ.சி. குணரெத்தினம் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (32), 116 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

Lotus Rose Position Opinion

Content Big-time Playing Trial Slots Which are the Better 100 percent free Slots? Inspired Playing Faq Only check out the list of game or use