ஜஸ்டின் கொத்தலாவலை (ஆங்கில மூலம்), ஏ.ஆர்.அமிர்தையா, டபிள்யூ. ஸ்டனிஸ்லாவுஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்). கொழும்பு 4: பொருளாதார மத்திய வழி இயக்கம், இல. 2, கொத்தலாவலை டிரைவ், 1வது பதிப்பு, வைகாசி 1958. (மஹரகம: சமன் பிரஸ்). (8), 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×14 சமீ. மத்திய வழித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. பொதுவுடமையினதும் முதலாளித்துவத்தினதும் நன்மையான அம்சங்களைக் கோர்த்தெடுத்து, நம் நாட்டின் நடைமுறைக்கு ஏற்ற ஒரு திட்டத்தை ஆக்குதல், வருமான வரியை நாட்டின் கட்டாய சேமநிதியாகப் பாவித்து, அதனை தேசிய பொருள் உற்பத்தித் திட்டங்களில் முதலீடாகச் சேர்த்தல், இலங்கையருக்குவருமான வரிக்குப் பதிலாக, திட்டங்களில் பங்களிப்பது, இப்பங்களிப்பு, வருமானவரி அதிகரிக்கப் பங்குகள் சிறிது சிறிதாகக் குறைக்கப்படும் முறையில் அமைத்தல் வேண்டும். வருட வருமானத்தில் 10 சதவீதத்தை தொழிலாளர் மத்தியிலே பங்கிட வேண்டும். இது அவர்கள் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் உபகாரப் பங்குப் பணமாக இருக்கச் செய்தல். சனப்பெருக்க வீதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழக்கைத் தரத்தை குடும்பங்களுக்குள்ளே உயர்த்துதல் என இன்னோரன்ன திட்டங்களை இந்நூல் விபரிக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 002847).