நீதி அமைச்சு. கொழும்பு: நீதி அமைச்சு, இலங்கை அரசாங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). (2), 96 பக்கம், விலை: ரூபா 165.00, அளவு: 24×15 சமீ. சான்று பற்றிய சட்டத்தினைத் தொகுப்பதற்கும், அதற்கு வரைவிலக்கணங் கூறுவதற்கும், அதனைத் திருத்துவதற்குமானதொரு கட்டளைச் சட்டம். இது நியதிச் சட்டமுறை மறுபதிப்புக் கட்டளைச் சட்டத்துக்கு (அத்தியாயம் 4) இணங்க நீதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளையின் அதிகாரத்தின் கீழ் அரசாங்க அச்சகரால் பதிப்பிக்கப் பெற்றதும், 2016, ஜனவரி 1ஆம் நாளன்று வலுவிலிருந்த சட்டத்தைத் தருவதும் 2005இன் 29ஆம் இலக்கச் சட்டத்தால் சான்றுக் கட்டளைச் சட்டத்துக்குச் செய்யப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65698).