14314 தேச வழமைச் சட்டம் .

செல்வநாயகம் அருட்குமரன் (தொகுப்பாசிரியர்). புத்தூர்: கலைக்குயில் கலை வட்டம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). vii, 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISDN: 978-624-5304-00-4. இந்நூல் வடமாகாணத் தமிழரின் வழக்காற்றுச் சட்டமான தேச வழமைச்சட்டம் பற்றியதாகும். இத் தொகுப்பு நூலானது, ஏற்கெனவே வெளிவந்த எச்.டபிள்யூ. தம்பையா அவர்களின் வு The Laws and Customs of the Tamils of Jaffna என்ற நூலின் உசாத்துணையுடன் 2001இல் சட்டத்தரணி சபா ரவீந்திரன் அவர்கள் வெளியிட்ட ‘தேசவழமை” என்ற நூலை முதன்மை அடிப்படையாகவும், மற்றும் சில இணையக் கட்டுரைகளின் உதவி கொண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பொது மக்களிடையே காணப்படும் தேசவழமைச்சட்டம் தொடர்பான சில கேள்விகளை மையமாகக் கொண்டு, அவர்கள் அறிந்து வைத்திருக்கவேண்டிய விடயங்களைச் சுருக்கமாக இத்தொகுப்பு வழங்குகின்றது. இந்நூல் தேசவழமை பின்னூட்டம், மத்தியஸ்தர் சபை, தகவல் அறியும் உரிமை, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறை, கடல் எல்லை, ரண்பிம உறுதிப்பத்திரங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தற்கால தேச வழமைச்சட்டம் பற்றிய பல்வேறு தகவல்களையும் தருகின்றது

ஏனைய பதிவுகள்

Frui Hooiwagen

Capaciteit 🍋 Kundigheid je inschatten onze webpagina voor gokkasten acteren? – thief Slot Play voor echt geld Eersterangs gerangschikte casino’s wegens erbij optreden voordat echt

12327 – பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரெ மாவத்தை). 96 பக்கம், விலை: ரூபா 125.00,