14316 நீதிமுரசு 1978.

கல்யாணி நடராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1978. (பருத்தித்துறை: குமார் அச்சகம்). (160) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1978ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் பல்வேறு தமிழ்க் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், திருமண வழக்குகளால் திசை திருப்பம், அனைத்துலக மனிதன், சட்டமும் சனப்பெருக்கமும், ஈழத்து நாடகவளர்ச்சி, ஏன் நான் அவளைக் காதலித்தேன், உன்னையே நீ அறிவாய், புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் முறையும் அவற்றின் முக்கியத்துவமும், பலி ஆடுகள், நீதிக்கோர் சிலம்பு, அன்புடையார் என்புமுரியர் பிறர்க்கு, தூங்காதே துணிந்து வா, சட்டக் கல்லூரியில் அன்று காந்தி சொன்னவை, புதிய சமுதாயம், தொழில் உறவுகள் மீதான வெள்ளை அறிக்கை, சாயல், இலக்கியத் தமிழரும் இன்றைய சட்டமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, சட்டமும் சனத்தொகையும், பாலைவனத்துச் சங்கீதங்கள், உழைப்பின் வெற்றி, தென் ஆசியாவில் சனநாயகமும் அரசியற் சட்டப் பரிசோதனைகளும், செயலாளரின் ஆண்டறிக்கை, திரும்பிப் பார்க்கிறோம் ஆகிய தலைப்புகளில் பவ்வேறு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 04426).

ஏனைய பதிவுகள்