14321 ரிஸானா நபீக்: மனச்சாட்சியின் படுகொலை.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. 2005ம் ஆண்டு, கிழக்கிலங்கையிலிருந்து சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்பார்க்கச் சென்றவர் ரிசானா நபீக் என்ற பெண். கடவுச்சீட்டில் 1982இல் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்ட றிசானாவின் உண்மையான பிறந்த ஆண்டு 1988ஆகும். தொழில்வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களினால் இவ்வூழல் செய்யப்படுவது இலங்கையில் வழமையானபோதிலும், ரிசானாவின் வாழ்வில் அதுவே மீளமுடியாத பொருந்தவறாகிவிட்டது. உண்மையில் 17வயதையே அடையாத அச்சிறு பெண்ணின் பொறுப்பிலிருந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதால், அவர்மீது கொலைப்பழியேற்றி றிசானாவிற்கு சவுதி அரசின் இஸ்லாமிய சட்டப்படி அல் தவாத்மி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் மரணதண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பகைப்புலத்தில் எழுந்த நூல் இது. ரிஸானா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, அதன் பின்புலத்தை, அந்த வழக்கு நடந்த விதத்தை, இஸ்லாமிய மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Quick Hit Casino Games

Content ¿tengo que Liberar Software De Poder Jugar A Juegos Sobre Casino Gratuito? Vídeo Slots Gratuito Online ¿existen Un Límite Sobre Lapso En el caso

12673 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2003.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: ஜே அன்ட் எஸ். சேர்விஸஸ் அச்சகம், 115 மெசெஞ்சர்