14324 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 259 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21.5 சமீ. இதிலடங்கியுள்ள அரசும் இறைமையும் மக்களும், பௌத்த மதம், அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும், மொழி, பிரசாவுரிமை, அரச கொள்கைக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும், மத்திய நிறைவேற்றுத்துறை குடியரசின் சனாதிபதி, மத்திய நிறைவேற்றுத்துறை சனாதிபதியும், அமைச்சரவையும், மத்திய சட்டவாக்கத்துறை-பாராளுமன்றம், மத்திய சட்டவாக்கத்துறை -பாராளுமன்றம்-நடவடிக்கை முறையும் தத்துவங்களும், மத்திய மத்திய சட்ட வாக்கத்துறை -அரசியலமைப்புக்கான திருத்தம், மக்கள் தீர்ப்பு, வாக்குரிமையும் தேர்தல்களும், அரசியலமைப்புப் பேரவை, பிராந்தியங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குதல், அரச காணி, நீர்நிலைகள் மற்றும் கனிப்பொருள்கள், நீதித்துறைநீதி நிர்வாகத்துக்கான நிறுவனங்கள், உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், பிராந்திய மேல்நீதிமன்றங்கள், நீதித்துறை- நீதித்துறைச் சுதந்திரம், நீதித்துறைஉயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், பிராந்திய மேல்நீதிமன்றங்களின் நியாயாதிக்கம், பகிரங்க சேவைகள், நிதி, ஆகிய 21 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34486).

ஏனைய பதிவுகள்

14696 சொர்க்கபுரிச் சங்கதி (சிறுகதைகள்).

எம்.எம்.நௌஷாத். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கியத் தேனகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (கொழம்பு 10: லீட் பிரின்டர்ஸ்). xxxiv, 404 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 750., அளவு: 22×14.5 சமீ., ISBN: