14326 இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு: முதலாம் பாகம் .

இ.முத்துத்தம்பி. வட்டுக்கோட்டை: இ.முத்துத்தம்பி, பொருளியல் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: கவின் அச்சகம், 122, நாவலர் வீதி). viii, 270 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 5.95, அளவு: 22×14 சமீ. இரு பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதலாம் பாகத்தில் யாப்பின் பின்னணி, யாப்பமை மன்றம், யாப்பின் முக்கிய அம்சங்கள், அடிப்படை உரிமைகளும் அரச கொள்கை நெறிகளும், தேசிய அரசுப் பேரவை-1 (அமைப்பு-அதிகாரம்), தேசிய அரசுப் பேரவை-2 (செயல்முறை-சிறப்புரிமை), நிர்வாகமும் அமைச்சரவையும் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு மாணவர்களுக்கு ஏற்றவகையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30723).

ஏனைய பதிவுகள்

11591 என் பாட்டில் நான்: கோப்பாய் சிவம் கவிதைகளும் பாடல்களும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்).  யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்). xii,