14328 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவல்கள், மீள்பதிப்பு, 2002, 2வது பதிப்பு, டிசம்பர் 1988, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). 145+110 பக்கம், விலை: ரூபா 170.00, அளவு: 24×15.5 சமீ. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்அரசியலமைப்பும், 2002வரையிலான 16 திருத்தங்களும் உள்ளடக்கப்பட்ட பிரசுரம். இதில் மக்கள், அரசு, இறைமைஃ பௌத்த மதம்ஃ அடிப்படை உரிமைகள்ஃ மொழிஃ பிரசாவுரிமைஃ அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்ஃ ஆட்சித்துறை: குடியரசின் சனாதிபதிஃ ஆட்சித்துறை: அமைச்சரவைஃ ஆட்சித்துறை: பகிரங்க சேவைஃ சட்ட மன்றம்: பாராளுமன்றம்ஃ சட்ட மன்றம்: நடவடிக்கை முறையும் தத்துவங்களும்ஃ சட்ட மன்றம்: அரசியலமைப்பைத் திருத்துதல்ஃ மக்கள் தீர்ப்புஃ மேனிலை நீதிமன்றங்கள்: உயர்நீதி மன்றம்ஃ நிதிஃ பொது மக்கள் பாதுகாப்புஃ நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர்ஃ பொதுஃ நிலைமாறுகால ஏற்பாடுகள்ஃ பொருள்கோடல்ஃநீக்கம்ஃ அரசியலமைப்பினை பிரசித்தஞ் செய்தல் ஆகிய 24 பிரிவுகளில் அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களும் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33039).

ஏனைய பதிவுகள்

14544 கம்பராமாயணம் சுந்தரகாண்டம்: பகுதி 1-காட்சிப் படலம் (விளக்கவுரையுடன்).

செ.நடராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, மாசி 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B.A. தம்பி ஒழுங்கை). (4), 1-97 பக்கம், விலை: ரூபா

14125 கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக மலர்.

மலர்க் குழு. கொழும்பு: தர்மகர்த்தா சபை, புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 1வது பதிப்பு, பெப்ரவர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 85 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×22 சமீ.