14330 சுதந்திரத்தை நோக்கிய அரசியல் திட்ட வளர்ச்சி.

வேலு உதயசேகர். சாமிமலை: வே.உதயசேகர், அறிவகம், 7/1, கோவில் லேன், ஓல்டன் மே.பி., 1வது பதிப்பு, மே 2016. (மஸ்கெலியா: விக்டோரியா அச்சகம்). (8), 111 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955-43194-0-0. க.பொ.த. உயர்தரத்தில் அரசறிவியல் பாடத்தினைக் கற்கும் மாணவர்களின் பரீட்சை வினாத்தாளானது, பாட அலகு மற்றும் பாடரீதியான துறைசார் அறிவு, தேர்ச்சியினை மாணவர்களிடம் அளவிடுவதை நோக்காகக் கொண்டு அமைகின்றது. இந்நூல் அத்தகைய தேர்ச்சியினை ஏற்படுத்துவதைப் பிரதான நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கப்பட்ட மாதிரி வினாக்கள், அரசியல் திட்ட அறிமுகம், கோல்புறூக் சீர்திருத்தம், குறுமக்கலம், மனிங் அரசியல் சீர்திருத்தம், மனிங் டெவன்சயர், டொனமூர் (வினா-விடை), சோல்பரி (வினா விடை), 1947 நாமநிர்வாகியின் அதிகாரம் (வினா விடை), சோல்பரியின் சட்டவாக்கத்துறை (வினா-விடை), தேசிய இயக்கம் (வினா-விடை), யாப்புக் கட்டமைப்பு, சமய மறுமலர்ச்சி இயக்கம், இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், மாபெரும் அக்டோபர் புரட்சி, 1954 தனிச்சிங்களச் சட்டம், உசாத்துணை நூல்கள் ஆகிய 16 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65126).

ஏனைய பதிவுகள்

Top Online Slot Machines 2024

Content Slot online diner of fortune: Free Spins Sa Real Money Slots Sa Start A Twitch Gaming Channel Play Now Casino Slots For Fun This