14331 தொழில் சட்டங்கள்: இலகுவான முறையில்.

சாறுக்க சமரசேகர. கொழும்பு 3: நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம், 4ஆவது மாடி, இல. 310, காலி வீதி, 1வது பதிப்பு, 2008. (மஹரகம: தரஞ்ஜி பிரிண்ட்ஸ், இல. 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). எiii, 64 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955-08-05. இந்நூலில் இலங்கையில் தொழிற் சட்டத்தின் வரலாறு, இன்றைய இலங்கையில் தொழில் சட்டம், 1935இன் 14ஆம் இலக்க தொழிற்சங்கங்களின் கட்டளைச் சட்டம், 1941இன் 27ஆம் இலக்க சம்பளச் சபையின் கட்டளைச் சட்டம், 1954இன் 19ஆம் இலக்க வியாபார நிலையம் மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், 1950இன் 43ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குச் சட்டம், 1958இன் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், 1980இன் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம், 1983இன் 12ஆம் இலக்க பணிக்கொடை செலுத்தும் சட்டம், தொழில் திணைக்களம் மற்றும் அத்திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்