பி.ஏ.சேனாரட்ண (செயலாளர்). கொழும்பு: செயலாளர், அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, 3வது பதிப்பு, 2019, 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). vi, 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 24×18 சமீ. தாபன விதிக்கோவையின் இத்தொகுதி, பொது நடத்தையும் ஒழுக்கமும் (அத்தியாயம் xlvii), ஒழுக்காற்று நடவடிக்கை முறை பற்றிய ஒழுங்குகள் (அத்தியாயம் xlviii), அரச அலுவலர்களினால் புரியப்படும் குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணை, அரச அலுவலர்களினால் புரியப்படும் குற்றங்கள் பற்றிய இரண்டாவது அட்டவணை, பின்னிணைப்புகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றன. தாபன விதிக்கோவையின் இத்தொகுதி, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 41,51,52,54 மற்றும் 144(1) ஆம் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரச அலுவலர்களும், தரைப்படை, கடற்படை, வான்படை உறுப்பினர்களும் தவிர்ந்த ஏனைய அரச அலுவலர்கள் அனைவரினதும் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு ஏற்புடையதானதாகும். இத்தொகுதியில் அடங்கிய ஏற்பாடுகள் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 55(4)ஆம் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது உபயோகத்திலுள்ள 1981.04.08ஆந் திகதிய 11ஆம் தொகுதிக்குப் பதிலாக இப்புதிய 11ஆந் தொகுதி 1999 நவம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65694).