இஷானி கொல்லுரே. பத்தரமுல்ல: தேசிய உற்பத்தித் திறன் செயலகம், அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, பத்தாம் மாடி, செத்சிரிபாய இரண்டாவது கட்டம், பத்தரமுல்ல, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், இல. 71/25, சென் ஜுட் பிளேஸ், கடோல்கலே). 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955- 1378-21-9.தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் நவீனமயப்படுத்தல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் இஷானி கொல்லுரே அவர்கள் தயாரித்துள்ள இந்நூல், நவீனமயப் படுத்தலை அறிமுகம் செய்தல், நவீனமயப்படுத்தலுக்கான வகைகள், அரச சேவை நவீனமயப்படுத்தல், உலக நவீனமயப்படுத்தல் நூற்றாண்டு மற்றும் நவீனமயப் படுத்தல் கொள்கை, அரச சேவை நவீனமயப்படுத்தல் ஜனாதிபதி விருது போட்டித் தொடர் ஆகிய ஐந்து அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்தி யடைந்த ஒரு இலங்கையை உருவாக்கும் அலுவலில் ஈடுபட்டுள்ள தேசிய உறபத்தித் திறன் செயலகம் இலங்கையின் சகல துறைகளினதும் நவீனமயப் படுத்தலுக்கான அபிவிருத்தியைச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான பல வேலைத்திட்டங்களைத் தயாரித்துவருகிறது. அவற்றில் ஒன்றாக 2017ஆம் ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்படும் அரச சேவை நவீனமயமாக்கல் ஜனாதிபதி விருது போட்டி அமைந்துள்ளது. நவீனமயமாக்கல் பற்றிய அறிவை ஏற்படுத்துவதற்கும் வாசகர்களுக்குள் நவீனமயமாக்கலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பினை ஏற்படுத்துவதற்கும் வழிவகுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.