சிவலிங்கம் புஷ்பராஜ், நயினாமலை முரளிதரன். கொழும்பு: மலையகப் பட்டதாரிகள் சமூகம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 12: காயத்திரி அச்சகம், து.டு.பு.4 டயஸ் பிளேஸ்). xxiv, 171 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISDN: 978-955-41479-0-4. நூலாசிரியர்களில் சிவலிங்கம் புஷ்பராஜ் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தராக கினிகத்தேனை, அம்பகமுவ பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார். நயினாமலை முரளிதரன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக மாத்தளை, இரத்தோட்டை பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார். பிரதேச செயலகங்களின் வாயிலாக பொது மக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய அறிவூட்டும் நல்நோக்கத்ததுடன் இந்நூல் பல்வேறு முக்கியமான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிர்வாகம், பிரதேச செயலாளர், நிர்வாகப் பிரிவு, பிறப்பு-இறப்பு மற்றும் திருமணப் பதிவாளர் பிரிவுகள், சமூக சேவைகள் பிரிவு, வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு, கணக்காளர் பிரிவு, காணி மற்றும் அனுமதிப்பத்திரப் பிரிவு, அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக் கொள்ளல், கிராம பிரிவுகள் மட்டத்திலான உத்தியோகத்தர்கள் என பத்துப் பெரும் பிரிவுகளின் கீழ் அவர்களின் கடமைகள், அவர்களின் மூலம் பொதுமக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய பணிகள் பற்றி விரிவான தகவல்களை இந்நூல் தருகின்றது.