14337 மக்கள் சேவையில் ஈராண்டு.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா நகர சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (கொழும்பு 2: வெட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை).(2), 68 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. வவுனியா நகரசபை இயங்கிய இரண்டாண்டுக் காலப்பகுதியான 04.04.1994 முதல் 03.04.1996 வரையிலான நிர்வாகக் காலத்தில் அதன் சமூகப் பணிகள் பற்றிய புகைப்பட ஆவணங்களுடன் கூடிய மக்கள் அறிக்கையாக இம்மலர் வெளிவந்துள்ளது. ஈராண்டுக் காலத்தில் இச்சபை சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, வீதித் திருத்தங்கள், கலை-கலாசாரம், சமூக சேவைகள் என்பன தொடர்பாக ஆற்றிய பணிகளை சிறு அளவில் இவ்விதழ் வெளிக்கொணர்கின்றது. இம்மலரின் வெளியீட்டுக் குழுவில் பிரதம இலிகிதர் இரா.லோகநாதன், எழுதுநர்களான ச.விஜயதாஸ், வே.வசந்தகுமார், செல்வி ப.பத்மலீலா, செல்வி சு.சோதிநாயகி, சூழல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் செல்வி த.தனுசினி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 15066).

ஏனைய பதிவுகள்

13033 எண்ணப் பெருவெளி: தினகரன் நாளிதழ் பத்தியெழுத்துக்களின் தொகுதி.

றமீஸ் அப்துல்லா. சம்மாந்துறை: றமீஸ் அப்துல்லா, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xvi 271 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: